January 26, 2018
தண்டோரா குழு
பத்மவிபூஷன் விருது பெரும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷண்,பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள்
நேற்று(ஜன 25) அறிவிக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.இதையடுத்து, பிரபலங்கள் பலரும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இசைஞானி மற்றும் தமிழகத்திலிருந்து பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.