January 26, 2018
தண்டோரா குழு
பத்மாவத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய பெண்களின் வீரம் விவேகம் தர்மத்தை சொல்லும் படம்
என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
பத்மாவத் திரைப்படம் இந்திய பெண்களின் வீரம், விவேகம், ஆற்றல், தர்மம் மற்றும் கற்பை உள்ள படியாக எடுத்துச்சொல்லும் படம். இந்த படம் ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை, தியாகத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.பத்மாவத் படம் வெளி வருவதற்கு முன் தானும் இப்படத்தை எதிர்த்ததாக தெரிவித்தார்.
அப்போது அலாவூதீன் கில்ஜி பெருமைப்படுத்துவதாகவும், ராணி பத்மாவதி அவமானப்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போராட்டதின் விளைவாக மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்பின் பத்மாவத் படத்தை பார்த்த பிறகு படத்தை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படம் படப்பிடிப்பில் இருக்கும்போது ராணி பத்மாவதியை அலாவூதீன் கில்ஜி காதலிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக வந்த தவறான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து பெண்கள் தர்மயுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் தீக்குளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாகவும், ராணி பத்மாவதியின் கணவரைப்பின்னால் இருந்து கொள்வதாகவும்,காட்சிகள் வருவது உண்மையானவை என்றும் தெரிவித்தார்.
இந்தப்படத்தை பார்த்தால் போராட்டக்காரர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள் என தெரிவித்தார். இந்தப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்றும்,அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றார்.
மேலும்,போராட்டக்காரர்களுடன் படம் குறித்து பேச இருப்பதாக தெரிவித்தார். இந்திய பெண்களின் தர்மயுத்தம் நிலை நாட்டப்பட்டிருப்பதாகவும், தென்னகத்தில் அலாவூதீன் கில்ஜியால் இந்து கோவில்கள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.