January 25, 2018
தண்டோரா குழு
கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தரமணி அருகே ஓஎம்ஆர் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கார் ஓட்டுநர் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது, அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் காவலரை கண்டித்து தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து, ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஓட்டுநரின் தற்கொலை முயற்சி சம்பவத்திற்கு போலீசாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நடுரோட்டில் போலீசாரை கண்டித்து கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கார் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் மற்றும் காவலர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன், தமிழ்ச்செல்வன், சந்திரசேகர் ஆகிய காவலர்கள் மீதும் பிரிவு 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.