January 25, 2018
தண்டோரா குழு
கோவையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய மத்திய தொழிற்சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்குதல், சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎண்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு தொழிலாளர் மற்றும் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய தொழிற்சங்கத்தினர், கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.