சென்னையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீசார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தரமணி அருகே ஓ.எம்.ஆர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கார் ஓட்டுநர் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர்.
அப்போது, அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் காவலரை கண்டித்து தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார்.இதனையடுத்து, ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து,ஓட்டுநரின் தற்கொலை முயற்சி சம்பவத்திற்கு போலீசாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடுரோட்டில் போலீசாரை கண்டித்து கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு