• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

January 24, 2018 தண்டோரா குழு

கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டன.இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு வாகனம் கூட கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்ல வில்லை.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 12 காசுகளுக்கும் டீசல் விலை 66 ரூபாய் 84 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 75 ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனிடையே கேரளாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் ஓடவில்லை.கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் வாளையார் தாண்டி தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும் நிலையில், தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு லாரி கூட கோவை வழியாக கேரளா எல்லைக்குள் செல்ல வில்லை.

கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் 18 சாலை மார்க்கங்களிலும் வாகனம் செல்லாததால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.மேலும்,பயணிகள் பேருந்து இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க