நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.
நாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த விருதுக்காக தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.இந்நிலையில் இதற்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ,மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆகியோர் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர்கள்,மற்றும் அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து காவலர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்