• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள் தான் – கமல்

January 23, 2018 தண்டோரா குழு

நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள் தான் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் கமலஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன்,

“ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது. நாம் வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் நம் பயணம் மக்களை நோக்கியே, கஜானாவை நோக்கி அல்ல.

மக்களை நோக்கிய பயணம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். நம் கூட்டத்தில் சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது கிடையாது. இனியும் அப்படித்தான் இருக்கும். இனி நீங்கள் எந்த கட்சி என கேட்டு உறுதி செய்து கொள்வோம். நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான்.

சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களை தலைமையின் அனுமதி பெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும்.நம் கூட்டத்தில் இன்னும் நிறைய பேர் இணைய இருக்கிறார்கள்.அவர்களுக்கு நீங்கள் தான் மூத்தவர்கள்”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க