• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

January 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனயடுத்து மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, கலைக்கல்லூரி முன் மாநில அரசுக்கு எதிராக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பேருந்து கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை எனவும்,நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தனது சம்பளத்தில் பாதியை தினமும் 100 ரூபாய் வீதம் பேருந்துக்கு செலவு செய்ய வேண்டி உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வேலை கொடுத்தால் பிரச்சனை இருக்காது எனவும், ஸ்கூட்டி வேண்டாம் வேலை வேண்டும் என வலியுறுத்தினர். கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் பேருந்து கட்டண உயர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க