• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுநீரக தானத்திற்காக காத்திருந்த பெண், கண் தானம் செய்தார்

July 14, 2016 தண்டோரா குழு

சிறுநீரக தானத்திற்காக காத்திருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்ததால், அவரின் கண்கள் தானமாகக் கொடுக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சுதப்தா என்ற 36 வயது பெண்மணியின் இரண்டு சிறுநீரகங்களும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு செயலிழந்துள்ளன. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்த அவர் டயாலிசிஸ் மூலம் உயிர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சுதப்தாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுதப்தாவின் குடும்பத்தினர் பல மாதங்களாக மாற்றுச் சிறுநீரகத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வரும் சிறுநீரக திருட்டைத் தடுக்க, சிறுநீரக தானம் பெறுவதற்கான சட்ட நடைமுறைகள் தற்போது கடுமையாக்கப் பட்டுள்ளதால், சுதப்தாவிற்கு சிறுநீரகம் பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து வழிமுறைகளும் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று துரதிஷ்டவசமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சுதப்தாவின் மறைவில் அவரது குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், சுதப்தா போல் உறுப்பு தானத்திற்காக யாரும் காத்திருக்கக் கூடாது என முடிவெடுத்தது சுதப்தாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
ஆனாலும், சுதப்தாவின் உடலைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு வர முடியாததால், இறுதியில் அவரின் கண்களை மட்டுமே தானமாக பெற முடிந்துள்ளது.
சுதப்தா இறந்தாலும் அவரது கண்கள் யாரோ ஒருவரின் கண்களில் ஒளியேற்றப்போகிறது என்ற மன நிறைவுடன் இருக்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.
இந்தியாவில் உறுப்பு தானம் குறித்த சரியான விழிப்புணர்வு பொதுமக்களை சென்றடையாததால், உறுப்பு தானத்திற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க