January 20, 2018
தண்டோரா குழு
குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் மத்தியபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஆனந்தி பென் படேல்.கடந்த 2014ம் ஆண்டு மோடி இந்திய பிரதமரானதைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை ஆனந்தி பென் படேல் பெற்றார்.
இந்நிலையில் குஜராத் ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் கோலி 2016ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார்.தற்போது மத்திய பிரதேச ஆளுநர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு ஆனந்தி பென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.