January 19, 2018
தண்டோரா குழு
கோவையில் நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடனை தள்ளுபடி செய்யக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று(ஜன 19) மனு அளித்தனர்.
தமிழக அரசு அறிவித்தும் கூலி உயர்த்தி தராததால் வாங்கிய கடனை திரும்பி செலுத்தி முடியாமல் திணறுவதால், கடனை தள்ளுபடி செய்யக்கோரி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் கோவை மாவட்டத்தில் 35,000 விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருவதாகவும், அதில் 90% பேர் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27% மற்றும் 31% சதவீத கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.
ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை கூலியை உயர்த்தி வழங்கவில்லை.இதனால் 3000 க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தாமல் வறுமையில் வாடுவதாக தெரிவித்தனர்.
இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்.