• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காட்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகை கொள்ளை

January 19, 2018 தண்டோரா குழு

காட்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலுர் மாவட்டம், காட்பாடி அடுத்த காந்திநகர் கெஜராஜ் காலனியில் வசித்து வருபவர் லக்ஷ்மி (70).இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.அப்போது அவரது வீடிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அந்த மர்ம நபர் தான் உனது மகனின் நண்பர் என்று கூறி லக்ஷ்மி அம்மாளிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்துள்ளார்

பின்னர் உங்களுக்கு கால் முழங்கால் பகுதியில் வலி உள்ளது என்று உங்கள் மகன் கூறியுள்ளார் என்றும்,அந்த வலிலையை போக்க பூஜை செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு லக்ஷ்மி அம்மாள் தான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார்.அதன் பின்னர் மர்ம நபர் தான் பூஜை செய்து குணப்படுத்துவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி ஒப்புக்கொண்டுளார்.

பின்னர் மர்ம ஆசாமி ஓம் நமச்சிவாய என்று கூறிகொண்டே வீட்டில் இருந்து சொம்பு ஒன்றை கொண்டு வர சொல்லி லக்ஷ்மி அம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த செயின் ஒன்றையும் கையில் அணிந்து இருந்த நான்கு வளையல்களையும் கழற்றி சொம்பில் போட சொல்லி ஓம் நமச்சிவாய என்று கூறிகொண்டே அதனை பூஜை அறையில் வைத்து விட்டு லக்ஷ்மி அம்மாளை காலை கழிவிக் கொண்டு வர சொல்லியுள்ளார்.

கால்கழுவ பின்புறம் சென்ற லக்ஷ்மியை வைத்து கதைவை தாளிட்டுவிட்டு மர்ம நபர் நகைகளை எடுத்துக்கொண்டு தான் எடுத்து வந்த இருச்சக்கர வாகனத்தில் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த விருதம்பட்டு போலீசார் நகையை கொள்ளையடித்து சென்ற மரம் ஆசாமி யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க