• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

January 19, 2018 தண்டோரா குழு

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறான கருத்து தெரிவித்தாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

ஆண்டாள் குறித்து தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்தது தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளரின் கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க