• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிசியின் 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு

January 18, 2018 தண்டோரா குழு

ஐசிசியின் 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016 – 17 ஆண்டுக்கான ஐசிசி ஆண்டு விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும்,சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும்   இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

மேலும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சாபர்ஸ் டிராபி விராட் கோலிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு, சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வழங்கப்படுகிறது.

ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணிகளில் சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானுக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த அம்யருக்கான டேவிட் ஷெப்பர்டு விருது மைரஸ் எராஸ்மஸ்க்குக் வழங்கப்படுகிறது.

ஐசிசி ஒருநாள் அணி 2017:
டேவிட் வார்னர் (ஆஸி.,)
ரோஹித் சர்மா (இந்தியா)
விராட் கோலி (இந்தியா) – கேப்டன்
பாபர் அசாம் (பாக்.,)
ஏ பி டிவில்லியர்ஸ் (தெ.ஆ.,)
க்வின்டன் டி காக் (தெ.ஆ.,)
பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,)
ஹசன் அலி (பாக்.,)
ரஷித் கான் (ஆப்கன்,)
பும்ரா (இந்தியா)

ஐசிசி டெஸ்ட் அணி 2017:
டீன் எல்கர் (தெ.ஆ.,)
டேவிட் வார்னர் (ஆஸி.,)
விராட் கோலி (இந்தியா) – கேப்டன்
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.)
புஜாரா (இந்தியா)
பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,)
க்வின்டன் டி காக் (தெ.ஆ.,)
அஸ்வின் (இந்தியா)
ஸ்டார்க் (ஆஸி.,)
ரபாடா (தெ.ஆ.,)
ஆண்டர்சென் (இங்கி.,)

மேலும் படிக்க