January 18, 2018
தண்டோரா குழு
கோவையில் ஹஜ் புனிதபயணத்திற்கான மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை மாநகரில் இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்துக் கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும், சிரமமும் ஏற்படுத்துவதற்காக வேண்டும் என்றே பழிவாங்கும் உள்நோக்கத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு இந்த நடவடிக்கை யை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினர், மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.