• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது – கவிஞர் வைரமுத்து

January 17, 2018 தண்டோரா குழு

டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மரணம் அதிர்ச்சியளிப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், தற்போது  இவரது மரணம் தொடார்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், சரத் பிரபு மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

டெல்லி மருத்துவக் கல்லூரித் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை. மாணவர்கள் இறக்கிறார்கள்;மரணங்கள் இறக்கவில்லை. காரணம் கண்டறியப்பட வேண்டும் இந்த வகையில் இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க