• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் அரிதாக காணப்பட்ட Phayre leaf குரங்குகள்

January 13, 2018 தண்டோரா குழு

சீனாவின் தென்மேற்கு பகுதியில் Phayre leaf குரங்குகள் அரிதாக காணப்பட்டது என்று விலங்கு ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மேற்கு மாகாணமான யூனானில் உள்ள Dehong Dai மற்றும் Jingpo அமைந்துள்ளது. சீன அரசால் Phayre leaf குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட குரங்குகள் ஜனவரி மாதம் தொடக்கத்தில் Dehong Daiமற்றும் Jingpo பகுதியில் காணப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

“பொதுவாக இந்த குரங்கு கூட்டத்தில் சுமார் 30க்கும் அதிகமானவை காணப்படாது. ஆனால், தற்போது 200க்கும் மேற்பட்ட குரங்குகள் காணப்படுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானது .Phayre leaf குரங்குகள் Phayre langurs என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திற்கு மேல், சுமார் 2,700 மீட்டர் உயரத்தில் உள்ள காடுகளில் அதிகமாக வாழ்கின்றன” என்று செங் ஜியன்வீய் பெய்ஜிங் வனவியல் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

1980களில் 2,000க்கும் குறைவான Phayre langurs குரங்குகள் Yunnanபகுதிகளில் வாழ்ந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 20ம் நூற்றாண்டின் இறுதியில், Yunnanபகுதிகளில்உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால், இந்த குரங்குகளின் வாழ்விடம் மற்றும் அவற்றின் எண்ணிக்கை அதிகாமாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க