January 12, 2018
தண்டோரா குழு
உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3வது இடத்தை பெற்றுள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டது சேர்ந்த காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன்.இந்நிறுவனம் ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதுவது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து சீனாநாட்டின் குடியரசு தலைவர் ஜி ஜின்பிங், ரஷ்ய நாட்டின் குடியரசு தலைவர் விளாடிமிர் புடின், பிரிட்டின் பிரதமர் தெரிசா மே, இஸ்ரேல் நாட்டின் குடியரசு தலைவர் பெஞ்சமின் நேடன்யாஹு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும்,ஜெர்மனி நாட்டின் குடியரசு தலைவர் ஆஞ்செலா மெர்கல் முதல் இடத்தையும், பிரான்ஸ் நாட்டின் குடியரசு தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.