January 12, 2018
தண்டோரா குழு
தேசிய இளைஞர் தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தலைவர்கள் பலர் விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
“விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறியுள்ளார்.