January 11, 2018
தண்டோரா குழு
போக்குவரத்து ஊழியர் வேலை நிறுதத்தின் எதிரொலியாக சென்னையில் நாய் பிடிக்கும் வண்டியில் பொதுமக்கள் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனினும், பொதுமக்கள் ஆட்டோ, டாக்சி, சேர் ஆட்டோக்கள், மூலம் பயணம் செய்கின்றனர். ஆனால், அதிலும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுத்துள்ளது.
இந்நிலையில்,சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் பிடிக்கும் வண்டியில் பொதுமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
பஸ் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்ட பொதுமக்கள் நாய் பிடிக்கும் வண்டி என்று கூட பார்க்காமல் அவசர அவசர மாக ஏறி பயணம் செய்கின்றனர். இது தொடர்பான புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.