• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் நியமனம்!

January 10, 2018 தண்டோரா குழு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதையடுத்து அந்த இடத்திற்கு சிவன் வருகிறார்.

தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து வரும் கே.சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சென்னை எம்.ஐ.டி யில் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் படிப்பை 1980ம் ஆண்டு படித்தவர் சிவன். பெங்களூர் ஐஐஎஸ்சியில் ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்கில் முதுநிலை படிப்பை முடித்தார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்கில் பிஎச்டி ஆய்வையும் முடித்தார். அதன் பின் இஸ்ரோவில் 1982ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். முதல் பணியாக அவர் ஈடுபட்டது பிஎஸ்எல்வி திட்டமாகும்.

மேலும், இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி சிவன் மூன்றாண்டுகள் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க