• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் – தொ.மு.ச. அறிவிப்பு

January 10, 2018 தண்டோரா குழு

அரசு அறிவித்துள்ள 2.44 ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொமுச தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது எனவே போக்குவரத்து ஊழியர்கள் இன்றே பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும்,பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2.44 சதவீதம் ஊதிய உயர்வு இடைக்காலமாக ஏற்று பணிக்கு திரும்ப தயார் என தொமுச அறிவித்துள்ளது. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜனவரி 4ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க