• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோ மல்யுத்த லீக் போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி வெற்றி!

January 10, 2018 tamil.samayam.com

புரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி டெல்லி அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.

புரோ மல்யுத்த லீக் தொடரின் 3வது சீசன் நேற்று டெல்லியிலுள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்பளக்சில் துவங்கியது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த லீக் போட்டியில் முதலில் மும்பை மகாராத்தி அணியிம், டெல்லி சுல்தான்ஸ் அணியும் மோதின. இதன் முதல் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும், 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் பெற்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.

இதையடுத்து, நடந்த 125 கி.கி. எடைப்பிரிவில் மும்பை அணியின் சதேந்தர் மாலிக் 7-6 என்று வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 62 கி.கி. எடைப்பிரிவில் மும்பை மகாராத்தி அணியின் கேப்டன் சாக்ஷி மாலிக், டெல்லி சுல்தான் அணியின் மோனிகாவை 18-2 என்று வெற்றி பெற்றார். கடைசி போட்டி முடிவில் மும்பையின் ராமோனவ் வெற்றி பெற, இறுதியில் மும்பை அணி 5-2 என்ற கணக்கில் டெல்லி அணியை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க