மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் படித்தவர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ” காதம்பரி ” நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.இதற்கிடையில், சிவ்கார்த்திகேயன் விழா மேடைக்கு வந்தவுடன் வேலைக்காரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போன்று அரங்கில் இருந்த அனைத்து மாணவர்களும் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து சிவகார்த்திகேயனை வரவேற்றனர்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்,
வேலைக்காரன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெரும் என்று நான் எதிர்பாக்கவில்லை. இக்கல்லூரிக்கு விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு வந்தது என் கல்லூரி நாட்களை நினைவுப்படுத்துகிறது. அதிலும் நீங்கள் என்னை வரவேற்ற விதத்தை பார்க்கும் போதே ஏதோ வேலைக்காரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் சூட்டிங் ஸ்பார்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இது எனக்கு ஒருஇன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி, நான் பிஎஸ்ஜி கல்லூரிக்கு என் கல்லூரி நாட்களில் வந்துள்ளேன். இங்கு தான் அனிருத்தை முதன் முதலில் நான் சந்தித்து பேசினேன் தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்றார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்