• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் தவறுதலாக கிடைத்த லாட்டரி சீட்டால், 5 மில்லியன் டாலர் பரிசு பெற்ற பெண்!

January 9, 2018

அமெரிக்காவில் தவறுதலாக கிடைத்த லாட்டரி சீட்டு மூலம் சுமார் 5 மில்லியன் டாலர் பரிசை ஒரு பெண்மணி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரை சேர்ந்தவர் ஒக்சனா சஹரோவ். அவர் நியூயார்க் நகரின் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்த போது லாட்டரி சீட்டு ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை வாங்கியுள்ளார்.ஆனால்,அந்த கடையின் பெண், அவர் தேர்ந்தெடுத்த லாட்டரி சீட்டுக்கு பதில் 10 டாலர் மதிப்புள்ள லாட்டரி சீட்டை மாற்றி தந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு தவறான லாட்டரி டிக்கெட் கிடைத்துள்ளது என்று அறிந்தும், ஒக்சனா அதற்கு பணம் செலுத்தி வாங்கியுள்ளார்.இதனையடுத்து அவர் வாங்கிய அந்த லாட்டரிக்கு அதிர்ஷ்டவசமாக 5 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில்,அந்த லாட்டரி சீட்டு போலி என்று முதலில் எண்ணினேன்.பிறகு அதை குலுக்கல் செய்யப்பட்ட அலுவலகத்திற்கு சென்று, அதை கட்டியபோது, எனக்கு பரிசு விழுந்துள்ளது என்ற உண்மை தெரிந்தது.இந்த பணம் என்னுடைய பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க