• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவின் விதியை பின்பற்றுவதற்கு பதில் என் உயிரை விடுவேன் – லாலு பிரசாத் டுவீட்

January 6, 2018 தண்டோரா குழு

பாஜக விதியை பின்பற்றுவதைவிட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். அதில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட பூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுசில்குமார், சுதிர்குமார் மற்றும் ராஜா ராமுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில்,தண்டனை அறிவிப்புக்குப் பிறகு லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எங்களை பின்பற்றுங்கள் இல்லை உங்களை முடித்து விடுவோம் என்ற பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமூக நீதி, அமைதி மற்றும் சமநிலையை நிலைநாட்டுவதற்காக உயிரை விடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க