• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு வாழ்த்து:வாட்ஸ் ஆப்பில் இந்தியா செம ஆக்டிவ்

January 5, 2018 தண்டோரா குழு

புத்தாண்டுக்கு உலகம் முழுவதும் வாட்ஸ் அப் மூலம் 75 பில்லியன் வாழ்த்துகள் பகிரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 2018 புத்தாண்டை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வரவேற்றனர். வாட்ஸ் ஆப் எனப்படும் குறுஞ்செய்தி ஆப் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்தி அனுப்பி புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தின் போது உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி சுமார் 75 பில்லியன்(7 ஆயிரத்து 500 கோடி) வாழ்த்து செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 2 ஆயிரம் கோடி செய்திகள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டவையாகும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப்பின் வரலாற்றில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ் ஆப் பயன்பாடு இதுதான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், ஆயிரத்து 300 கோடி படங்கள் மற்றும் 500 கோடி வீடியோக்கள் ஆகியவையும் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துக்களாக பகிரப்பட்டுள்ளன. புத்தாண்டு இரவில் ஒரே நேரத்தில் வாழ்த்து செய்திகள் குவிந்ததால் வாட்ஸ் ஆப் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க