• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

January 5, 2018 தண்டோரா குழு

மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.அதன்பிறகு தற்போது தான் மாற்றம் செய்யப்படுகிறது.சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள இந்த புதிய பத்து ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும் பின்புறத்தில் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொனார்க் சூரிய கோவிலின் முத்திரையும் அச்சிடப்பட்டுள்ளது.

அதைபோல் ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. ரூ.10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலைச்சின்னமும் உள்ளது.

மேலும், புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரூ.2,000, ரூ500 மற்றும் ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதை தவிர 50 ரூபாய் நோட்டின் வடிவத்தை மாற்றி அமைத்தது. தற்போது 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க