• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் வழக்கு

January 5, 2018 தண்டோரா குழு

பொதுமக்களை இழிவுபடுத்தும் விதமாக கட்டுரை எழுதியதாக நடிகர் கமல்ஹாசன் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த டிடிவி ஆதரவாளரான இளங்கோவன் என்பவர் கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆர்.கே.நகர் இடைதேர்தல் முடிவு குறித்து வார நாளிதழில் வெளியாகும் தொடரில் டிடிவி தினகரன் மற்றும் ஆர்.கே.நகர் மக்களை இழிவுப்படுத்தி எழுதியுள்ளதாக அந்த வரிகளை குறிப்பிட்டு நடிகர் கமலஹாசன் மீது இந்திய தண்டனை சட்டம் 500 மற்றும் 501 பிரிவின் கீழ் அவதூறு வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். அன்றைய தினம் இம்மனு விசாரணைக்கு உகந்ததா இல்லை என்று தெரியவரும்.

மேலும் படிக்க