• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது விஷால் அறிக்கை !

January 5, 2018 தண்டோரா குழு

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்ததால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் 2.40 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், 2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் தொழிற்சங்கங்கள் அறிவித்தது.இதையடுத்து, இன்று தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், நடிகர் விஷால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “அறிவிக்கப்படாத போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்ததால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும்” என விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க