• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க வை கிண்டலடிக்கும் சமூக ஊடகவாசிகள்.

March 11, 2016 வெங்கி சதீஷ்

நேற்று தே.மு.தி.க தனித்து போட்டி எனக் கூறியதில் இருந்து அந்தக் கட்சியை கூட்டணிக்கு அளித்த அனைத்து கட்சினரையும் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இதில் அதிகமாகச் சிக்கியது தி.மு.க தான். ஏனெனில் தே.மு.தி.க இதோ கூட்டணியில் சேர்ந்துவிட்டது, பழம் கணிந்து கொண்டு இருக்கிறது பாலில் விழும் என ஏகத்திற்குப் பேசியதோடு மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியினரும் முக்கியமாக குஷ்புவும் அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார் என உறுதி தெரிவித்தனர்.

இதனால் தி.மு.கவை அதிகமாக வருத்தெடுக்கின்றனர். அதில் கலைஞர் வீட்டருகே பழம் விற்பவர் வரும்போது அவரைக் கட்சியினர் துரத்துவது போலவும், அனைவரும் விஜயகாந்த் அல்வா கொடுப்பது போலவும் சித்தரித்து உள்ளனர்.

மேலும் விஜயகாந்தின் குளியலறையில் எட்டிப்பார்க்கும் கலைஞர் தனியாகவா நிற்கிறாய் எனக் கேட்பது போலவும் அதற்கு அவர் திட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு பழம் எனச் சொல்லி மட்டும் சுமார் 50க்கும் அதிகமான கமெண்டுகள் வந்துள்ளன.

இதில் மேலும் ஒரு சில இடங்களில் சுவர் விளம்பரங்களில் தே.மு.தி.க பெயரையும் சேர்த்து தி.மு.கவினர் சுவர் விளம்பரம் எழுதி இருப்பது விமர்ச்சகர்களுக்கு வசதியாக இருக்கிறது.

மேலும் படிக்க