December 30, 2017
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்து வரும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள் முதலில் அவர் சொல்லட்டும். இன்று தமிழ் நாடு ஐசியூவில் உள்ளது.
தமிழ்நாட்டை காப்பாற்ற நிறையப்பேர் தேவை.தேவைபட்டால் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்றார்.மேலும் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.