• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன்

December 30, 2017 தண்டோரா குழு

முத்தலாக் சட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முஸ்லிம்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தினகரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வெற்றி வெற்றார். இதற்கிடையில், இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தடைச் சட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலவித எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில், முத்தலாக் விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

முத்தலாக், சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில் மத்திய அரசு இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர கோலமாகவும், அலங்கோலமாகவும் கொண்டு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தை பொருத்தமட்டில் அனைத்து மதங்களும் சம உரிமையோடும் பல வேறுபட்ட பண்பாட்டையும் நாகரீகத்தையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தமிழகத்தின் தனிச்சிறப்பு.

இதில் இஸ்லாமிய மக்களின் சம்பிரதாயமான முத்தலாக் முறையில் பாதிப்போ,குறைபாடோ இருக்குமேயானால் அதனை அம்மதத்தினை தழுவிய மக்களின் கருத்தினைக் கேட்டு அதன்படி ஒரு பாதுகாப்பு அம்சத்தோடு வழங்குவதுதான் ஏற்புடையதாக இருக்கும். அதுதான் முறையும் கூட. எனவே அதீத தீவிரத்தோடு கொண்டு வரப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அனைத்து இஸ்லாமியர்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்ல என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க