• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏவை திருப்பி அடித்த பெண் போலீஸ்

December 29, 2017 தண்டோரா குழு

இமாச்சல் பிரதேசத்தில் தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் பதிலுக்கு பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஆட்சியை இழந்தது. இதற்கிடையில் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் இமாச்சல்பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது, இக்கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷாகுமாரி வந்திருந்தார்.

ஆனால்,கூட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடி இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆஷாகுமாரியை ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆய்வுக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷாகுமாரி, அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். எனினும், சிறிதும் தாமதிக்காத அந்த இளம் பெண் காவலர் எம்.எல்.ஏவை பதிலுக்கு தாக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க