December 29, 2017
தண்டோரா குழு
மும்பை தீ விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர்,19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
மும்பையில் ஏற்பட்ட தீ விபத்த்தில் பாதிப்படைந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.