December 29, 2017
தண்டோரா குழு
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடன் மற்றும் நிதி நெருக்கடியால் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும்,இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் பேசுகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.