இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடாின் லீக் சுற்று ஆட்டத்தில் ஜேம்ஷெத்பூா் அணியை சென்னை எப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 4வது இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஜேம்ஷெத்பூாில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணியும், ஜேம்ஷெத்பூா் எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட நட்சத்திர ஆட்டக்காரா் ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்