• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவையில் நிறைவேறியது முத்தலாக்கை தடை செய்யும் மசோதா

December 28, 2017 தண்டோரா குழு

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமியர்கள் முறைப்படி ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்லும்விவகாரத்தில் வெறும் சர்ச்சைகள் கிளம்பியது.இதையடுத்து, இதனைத்தொடர்ந்து முஸ்லிம்களில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவதை குற்றமாக கருதி தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் தயாரித்தது. இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், இச்சட்டத்தை நடப்பு குளிர்கால கூட்ட தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் முறையில் விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ், முஸ்லீம் லீக், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து முத்தலாக் மசோதா தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்த மசோதா எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. எனினும், முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும் படிக்க