December 28, 2017
தண்டோரா குழு
ஐந்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அங்கான்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று(டிச 28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பாக சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட பணித்தன்மை, பணிச்சுமையை கருத்தில் கொண்டு மேம்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தினர்.
மேலும்,காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை தாமதமின்றி உடனடியாக நிரப்பக்கோரியும்,முதுநிலை அடிப்படையில் பணியாளர்களுக்கு மூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்கவும், அரசு மற்றும் மாவட்ட அலுவலர்களால் கேட்கப்பெறும் அறிக்கைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கவும், அலுவலகம் மற்றும் கணிணி பணியார்களை தனியாக நியமிப்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.