• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கவுண்டம்பாளையத்தில் மலர்ந்த நிஷாகந்தி பூ

December 28, 2017 தண்டோரா குழு

கோவையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நிஷாகந்தி பூ பூத்துள்ளது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இமயமலையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ கோவையில் பூத்துள்ளது.கேக்டஸ் எனப்படும் வகை செடிகள் தண்ணீர் மிகக்குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மையுடையவை. குளிர் அதிகம் உள்ள இமயமலை போன்ற பகுதிகளிலும் இது போன்ற பல்வேறு வகையான கேக்டஸ் செடிகள் உள்ளன. இவற்றுள் ஒன்று பிரம்ம கமலம் என அழைக்கப்படும் நிஷாகந்தி பூவாகும்.

தற்போது பரவலாக பல்வேறு இடங்களிலும் இந்த வகை செடிகள் அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. கோவை கவுண்டம்பாளையம் முத்துநகர் பகுதியை சேர்ந்த பிரசன்னதேவி அத்தகைய ஒரு செடியை கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இரவில் மட்டுமே பூக்கும் இந்த செடியில் பூ ஒன்று பூத்துள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மன் படுத்திருக்கும் நிலையில் நாகம் ஒன்றும் படமெடுக்கும் நிலையில் இந்த பூவின் நடுப்பாகம் அமைந்திருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க