• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெடா வெட்டி விருந்தளிக்க வேண்டும் என்பதுதான் ஆசை – ரஜினி

December 28, 2017 தண்டோரா குழு

ரசிகர்களுக்கு கெடா வெட்டி விருந்தளிக்க வேண்டும் என்பதுதான் ஆசை அந்தநாள் விரைவில் வரும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி,மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான்.

ரசிகர்களை தன் காலில் விழ வேண்டாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். பணம், பெயர், புகழ், அதிகாரம் கொண்டவர்களின் கால்களில் விழவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும், உங்களுக்கு கிடா வெட்டி சோரு போட ஆசை, ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி அதுக்கு ஒரு நாள் வரும் என்றார்.

மேலும் படிக்க