December 28, 2017
tamil.samayam.com
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சாதிப்பார் என முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இளம் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று தென் ஆப்ரிக்கா கிளம்பினர். இந்நிலையில், தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிராவிட் கூறுகையில்,’ தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அதற்கு ஏற்ப தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களும் மிரட்டலாக பவுலிங் செய்வார்கள். இந்திய அணியை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக சாதிப்பார். பவுலிங்கில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி அவருக்கு உள்ளது.’ என்றார்.