• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன் முறையாக இலவச பறை இசை மற்றும் நடன பயிற்சி பட்டறை

December 27, 2017 தண்டோரா குழு

கோவையில் முதன்முறையாக இலவச பறை இசை மற்றும் நடன பயிற்சி பட்டறை, கோவை ஹோப் காலேஜில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெற்றது.

கோவையில் முதன் முறையாக ஆயுதம் கலைகளின் சங்கமம் சார்பில் இலவச பறை இசை மற்றும் நடன பயிற்சி பட்டறை நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் விசாரணை திரைப்பட இயக்குனர் ஆட்டோ சந்திரன், தூய்மை இந்தியா திட்டத்தின் அம்பாஸ்டாரும், கோவை குயின், ஐகான் ஆப் கோயம்புத்தூர் போன்ற விருதுகளை வாங்கியவரும், சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரின் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், பறை இசை பயிற்சியில் மாணவர்களாகவும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் அதன் சுற்று பகுதியினை சேர்த்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி குறித்து ஆயுதம் கலைகளின் சங்கமத்தின் நிர்வாக அறங்காவலர் விவேக், அறங்காவலர் சரத்குமார் ஆகியோர் கூறுகையில்,பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உருமியாட்டம், நெல்பிடியாட்டம், கரகாட்டம், பரதம், தவில், கிராமிய பாடல்கள், நெருப்பு சாகசம், வீதி நாடகம் போன்ற பல கலைகள் நமது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் ஆகும்.தற்போது இந்த கலைகளில் 90 சதவீதம் அழிந்து வருகிறது. அழிந்து கொண்டு வரும் நமது பாரம்பரிய கலைகளை பற்றி இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் பல நிகழ்ச்சிகள் எங்கள் அமைப்பு சார்பில் நடத்தி வருகிறோம்.இதன் மூலம் கலைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் முக்கியத்துவம், திறன்களை வெளி கொண்டு வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த கலைகள் அனைத்தும் நமது நாட்டின் அடையாளங்கள். இதனை மீட்டெடுப்பது எங்களின் குறிக்கோள். இன்று ஒரு நாள் முழுவதும் இலவசமாக பறையாட்டம் பற்றி விழிப்புணர்வு மற்றும் இசை, நடன பயிற்சி நடத்துகிறோம்.இந்த நிகழ்ச்சி கோவை, அவிநாசி சாலை, ஹோப் காலேஜில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெறுகிறது.நிகழ்ச்சியினை எங்கள் அமைப்புடன் சேஞ்ச் டிரஸ்ட், கோவை கலைக்கூடம் இணைந்து நடத்துகிறோம்.

பறையாட்டம் இசையின் ஆதி என்றும் கூறலாம். ஏனெனில் முன்னோர் காலத்தில் சாமியினை அழைக்க பறை இசையை வசிப்பர். அதுமட்டுமல்லாது மருத்துவ வசதி இல்லாத காலத்தில் ஒருவர் உயிருடன் இருப்பது அறிய பறை இசையினை வாசிப்பார்கள். வாசிக்கும்போது அவரது உடல் அசைந்தால் உயிருடன் உள்ளார் என்பது தெரிந்து விடும். எனவே தற்போது வரை சாவு ஊர்வலத்தில் பறை இசைக்கின்றனர். மேலும் ஆதிமனிதன் தன்னை விலங்கிடம் இருந்து பாதுகாத்து கொள்ள பறை இசை அடித்து விரட்டுவான்.பறையாட்டம் இசைத்து நடனம் ஆடுவதால் உடற்பயிற்சி செய்யும் செயல் போன்றது. உதாரணமாக அக்குபஞ்சர், மனோத்துவ மருத்துவ முறை என்பது போன்று பல வரலாறு கூறப்படுகிறது.

இந்த கலையினை கல்வியாளர்களும் கற்று கொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.இந்த குழுவில் 8 முதல் 25 பேர் வரை இசைத்து நடனம் ஆட இயலும். தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக, 12 வகையான கலைகள் குறித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.இந்த பாரம்பரிய கலையினை பல நிகழ்ச்சிகளிலும் நடத்தி வருக்கிறோம் என்றனர்.

மேலும் படிக்க