• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு வெயிட்டான வார்னிங் கொடுத்த ‘டான்’ ரோகித் !

December 27, 2017 tamil.samayam.com

தென் ஆப்ரிக்க அணிக்கு இந்தியாவின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா வெயிட்டான வார்னிங் கொடுத்துள்ளார்.

இந்தியா வந்த இலங்கை அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களையும் இழந்து வெறும்கையுடன் நாடு திரும்பியது. இத்தொடரில் இலங்கையின் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் நிக் போதஸ் இருந்தார்.

இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதுவரை தொடரை கைப்பற்றியதே இல்லை.

இந்த வரலாற்றை இளம் கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றி எழுதும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில்,

“இந்திய அணி வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை தற்போதைக்கு அசைப்பது மிகவும் கடினம். தென் ஆப்ரிக்காவில் வெற்றி பெற மட்டுமே இந்திய அணி செல்கிறது. டிரா செய்யவோ தோல்வியை சந்திக்கவோ செல்லவில்லை.” என்றார்.

மேலும் படிக்க