December 23, 2017
cinemapettai.in
விக்ரம் நடித்த சாமி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால்,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு அது மட்டும் இல்லாமல் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.
சாமி-2 படத்தில் நடிகை திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின,பின்பு நடிகை திரிஷா வெளியேறினார் என கூறினார்கள் அதற்க்கு சரியான காரணத்தை திரிஷா கொடுத்தார்.
மேலும் தற்பொழுது இந்த படத்தில் நடிகை உமா ரியாஸ்கான் நடிக்க இருக்கிறார், உமா ரியாஸ்கான் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை விட்டு நீண்ட நாட்களாக விலகியிருந்தவர் உமா.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும் இதில் சூரி, பாபு சிம்ஹா, பிரபு என ஒரு நட்ச்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறாராம்.