• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: சன்னி லியோன் திடீர் அறிவிப்பு

December 22, 2017 தண்டோரா குழு

பாலிவுட்டின் முன்னணி நாயகி வலம்வரும் ஆபாச பட நடிகையான சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் நடனம் ஆடினார்.இதுமட்டுமின்றி தமிழில் தயாராகும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சன்னி லியோனை அழைத்து வந்து நடனம் ஆட வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதற்காக அதிக தொகைக்கு டிக்கெட்டுகளும் அச்சிட்டு விற்கப்பட்டன. சன்னிலியோன் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட் வாங்கினார்கள்.

இந்நிலையில், சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் திடீர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சன்னியின் உருவ பொம்மைகளையும் எரித்தனர். மேலும், நிகழ்ச்சியை நடத்து பவர்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதையடுத்து, சன்னி லியோன் நடனத்துக்கு கர்நாடக அரசு அனுமதி மறுத்து நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் சன்னிலியோன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் கலந்து கொள்ளும் புத்தாண்டு நிகழ்ச்சியில் எனக்கும் எனது குழுவினருக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே அந்த நடன நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க