December 22, 2017
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை வரும் 27-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. பாராளுமன்ற கூட்டம் துவங்கியதில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் எனவும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடர் துவங்கி ஒரு வாரம் ஆகியுள்ள உள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அமளியையடுத்து, மாநிலங்களவையை வரும் டிசம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.