December 22, 2017
தண்டோரா குழு
ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் வாரங்கல் மாவட்டம் திருமலகிரியுலுள்ள ராஜபேட்டையில் கோழிபண்ணையில் பால்ராஜ் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கேயே அவர்கள் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையிலிருந்து கோழி ஒன்றை சமைத்து உண்டுள்ளனர்.
இந்நிலையில், பால்ராஜ் குடும்பத்தினர் 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இரவில் அவர்கள் சாப்பிட்ட கோழி உணவால் மரணமா? கடன் தொல்லை காரணமா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.