December 19, 2017
தண்டோரா குழு
அமெரிக்க குடியரசு தலைவரின் மகள் இவாங்கா டிரம்ப் தெலங்கான முதலமைச்சருக்கு எழுதிய நன்றி கடிதம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியரசு தலைவரின் மகள் இவாங்கா டிரம்ப் கடந்த மாதம் 3 நாள் பயணமாக
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் இருந்து, சுமார் 36௦ உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க தூது குழுவும்,கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் அதில் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து போது அவர், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் தங்கவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியாவை விடைப்பெற்று சென்ற அவர் தற்போது தனது பயணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நன்றி தெரிவிக்கும் வகையில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
“3 நாள் பயணமாக நான் இந்திய வந்திருந்தபோது, நீங்கள் காட்டிய அன்புக்கும் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன்.மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.